Posts

Showing posts from 2015

தேன்சிட்டுகள்

அமர்ந்துண்டு பார்த்ததில்லை பறந்துண்டு பார்த்ததுண்டு வெளிச்சம் நிறைந்திருக்கும் அலைகள் இருந்திருக்கும் தெருக்களில்  வருவதில்லை மலர்களை தேடும் தேன்சிட்டுகள்!.

மனதைக் கவர்ந்த பாடல்

காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்களே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன. தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு  முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது? தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் கூட்டணி அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில்...

பற்றிட பற்றிடும்

எண்ணையை ஏற்றிடாத நூலும் எரிந்துவந்த குச்சியின் சாம்பலும் எண்ணிக்கை குறையும் பெட்டியும் என்றாவது சொல்லிடும் தலைப்பை!.

அச்ச(க)த்தில் காகிகதங்கள்

வண்ணமையும் வருடாத எழுத்துக்கள் வண்ணமையில் நடமாடு மொவியங்கள் பதிக்கவரிசையில் முக்கால நிகழ்வுகள் தவிர்க்கயியலாத இலக்கிய குப்பைகள்!.

உன்னைக் கண்டு

Image

இரவும் வரும் பகலும் வரும் - வருடந்தோரும் வரும்

நாட்களில் திறந்திடும் அணைகள் நடந்தசைந்து வரும் நீர்துளிகள் விலையேற காத்திருக்கும் உரங்கள் விரைந்து கலந்திடும் கழிவுகள் எடுத்து குடித்திடும் நகரங்கள் ஏக்கத்தில் காய்ந்திடும் வயல்கள் வாடிக்கையென கடந்திடும் வருடங்கள் வார்த்தைகளை மாற்றின கவிதைகள் 02/10/2016 வண்டலும் உருண்டு வரும் கற்களும் பெருத்து வரும் மேனியை குளிரூட்ட வரும் வண்டியை மெருகூட்ட வரும் அப்புறம் பயிராக்க வரும் எத்தனை நாட்கள் வரும்? 20/09/2015

தாய் மேல் ஆணை

Image

ஆனைமலை

கதிரவன்தழுவும் செந்நிறத்தானை அமர்ந்துபார்க்கும் நமச்சிவாயனை கடம்பவனத்தின் காவல்யானை கடப்பவர்க்குப் பாறையிலானை!.

வாழ்க்கை

வாழ்க்கையென்ற மலைப் பாதையில் ரேகைகளாய் பிரிவுகள் இணைப்புகளை அறிய முக்காலும் தேய்ந்துவிடும் முகங்களும் ரேகையிடும்!. ஒன்று விருப்பப்பாதை சிலபடி இறங்கினால் தெரியும் வொருகுளம் அலையாத நீரில்தெரியுமுன் முகம் காட்டுமதன்குணம்! மற்றொன்றோ படிகட்டுகள் யாரோகட்டி வைத்தவை ஆசைகள் பூட்டியகைகளுடன் கண்கள்மூடியும் கால்செல்லும் அலையலையாய் மனிதர்கள்! மற்றவற்றில் கால்தடங்களில்லை பயணிக்க தடையேதுமில்லை…!

பின்னால் வரும் நிலவு

பின்தொடரும் வொலியால் பின்திரும்ப நானும் பின்னிவரும் கொடியும் பின்திரும்பி நாணும் பின்னல்க ளாடும் இன்னல்கள் வாடும்! உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும் புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும் கருவிழியும் பார்க்கும் கண்ணிமையும் தாக்கும்! காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும் சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும் சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும் இடைவெளிக் குறையும் நிலவோளி நிறையும்!.

நினைவு நாடாக்கள்

ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தொடராத என்னைப் போன்றோருக்கு தற்பொழுது புத்தகமாக வந்துள்ளது. இருக்க வேண்டும் உங்கள் எழுத்து வாராவாரம்; இருக்க கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்! என்று ஆரம்பமே கவிஞரின் கலைநயதில் களைகட்டுகிறது. முதல் தொகுப்பே வாழ்க்கையை பிய்து பின்னி விளையாடுகிறது. ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும் இவ்வகை எழுத்தில் வாழ்வும், வாழும் எழுத்தும். நிஷ்காம்ய கர்மம் என்றொரு தொகுப்பு, நமக்கிட்ட பணியை விருப்பு வெறுப்பின்றி செவ்வேனே செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது. தொழில் வேறு நம்பிக்கை வேறு என்று வாழ்ந்தவர்களைப் பற்றிய சுவையான தொகுப்பு அது. தொகுப்பின் சாரத்தை, கவிஞர் தன்பாணியில் ஒரு கவிதையில் அடைத்திருப்பார். பாட்டும் வசனமும் படத்தில் வரும் சமயத்திற்கேற்றபடி; சமயத்துக் கேற்றபடி அல்ல! நினைவு நாடாக்களை முழுவதுமாக படித்து முடிக்கும் போது தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. நினைவும் அது பதிந்த நாடாவும், சிலசமயம் சிலர் வசதிக்கேற்றபடி (ஏனோ மனது இதைச் சொல்லுகிறது???). ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று தலைமுறையைக் கண்ட கவிஞர் வாலிபக்கவிஞர் என்பதைப் பல தொகுப்பில் பார்க்க முடிந்தது....

விரல்கள்

இயலோடு இசைவதை வடிக்க இயல்போடு இணைவதை பிடிக்க இயல்பாக இருப்பதை படிக்க இயங்கின இருகை விரல்கள்

ஊஞ்சலாடி

தன்மெயாட வுடன்கால் பறக்க எதிர்மரமாட மலையும் சாய காண்டமனம் கதறும்... தானாட தரணியாடும்! மரக்கிளையும் க(ஆ)ட்டிய கயிறும் காற்றுடன் ஆடிக்கொண்டு இருந்தது…

கைவண்ணம்

எல்லையில்லா தீட்டல்கள் படவரை முறையானது வாலில்லா விலங்குகள் வால்தனம் காட்டியது முகத்தின் சுளிப்புகள் முகமுடி கிழித்தது ஏந்திய தூரிகை வண்ணத்தை பொழிந்தது எழுதிய காட்சிகள் கைகாலிலும் இருந்தது கற்பனை குதிரையும் நிறம்வழி வந்தது

ஆட்டம் நீரோட்டம்

கோடைக்கு வியர்வையை உடலுடுக்க குறைகண்ட விழிகளும் சிறகடிக்க உடுப்பும் உடலுடன் பயணிக்க காற்றுடன் வெயிலும் கலந்தடிக்க மெலிந்தவள் விரிந்து நிலமணைக்க மனதும் உடலும் குளிர்ந்த நீரும் கொதிக்கும் மணலும் பாய்ச்சலும் நீச்சலும் சுழன்றுவிட தென்னங் கீற்றைபோல மிதந்துவிட சிறகடித்த விழிகளும் சிவந்துவிட உள்ளும் புறமும்கறை களைந்துவிட ஒட்டத்தில் ஆட்டம் களைத்துவிட மனதும் உடலும் மலரும்தளிரும்

காலம் கடந்தன

ஊட்டிய கைகளும் தாங்கிய தோள்களும் வளர்த்துவிட்டன தளர்ந்த நடைகளாய் சுருங்கிய தோல்களாய் தேய்ந்துவிட்டன நினைவுகளே உறவுகளாய் நித்திரையே உலகமாய் ஓய்ந்துவிட்டன அறையிலே படங்களாய் அதன்கீழ் விளக்காய் ஓளிர்ந்துவிட்டன கண்ட கண்களும் உள்ளிருந்த அந்நீரும் தனித்துவிட்டன

விதைகள்

உதவும்கைகளும் உறவின்முறைகளும் நிலைபெறவேண்டி சப்தமயங்கும் சங்கமியங்கும் நினைக்கின்றமனதும் நீண்டகாலமும் உடன்வரவேண்டி உரியவர்பொருளும் ஊரறியுபெயரும் உறவினர்களுதவ உறவுகள்கூடும் அருள்பெறவேண்டி நம்பிக்கைவிதைகளும் நலமுடன்வளரும் அடிப்படையறிவும் அனுபவபார்வையும் வருந்தடைதாண்டி தலையெடுத்தெழுதும் தலைமுறையிலிருக்கும்

காட்டில் ஓரானை

Image
அன்று ஞாயிறும் தயங்கியெழ நானுமதில் மயங்கிவிழ வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட சிறகையவள் விரித்துவிட இலைகளை அணைத்துவிட மேனியும் மறைந்துவிட மேற்கில் தெரிந்துவிட வாசகமும் அலையா யெழுந்துவர வாசகரும் சிலையா யிருந்துயெழ நனைந்து வணங்கிவிட நினைவில் பதிந்துவிட நன்று

என்றும் பூவாடும்

Image
கனியுமென்னை கொய்தவரில்லை கொய்தவரென்னை தொடுப்பதுண்டு தொடுத்தவரென்னை அடைப்பதில்லை அடைப்பதிலென்னை விற்பதுண்டு விற்பவரென்னை அரிந்ததில்லை அறிந்தவரென்னை அணிவதுண்டு அணிந்தாலென்னை இயல்மூடவில்லை இயல்பென்றுமென்னை வா(ஆ)டவிடுவதுண்டு