நினைவு நாடாக்கள்
ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தொடராத என்னைப் போன்றோருக்கு தற்பொழுது புத்தகமாக வந்துள்ளது. இருக்க வேண்டும் உங்கள் எழுத்து வாராவாரம்; இருக்க கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்!
என்று ஆரம்பமே கவிஞரின் கலைநயதில் களைகட்டுகிறது. முதல் தொகுப்பே வாழ்க்கையை பிய்து பின்னி விளையாடுகிறது. ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும் இவ்வகை எழுத்தில் வாழ்வும், வாழும் எழுத்தும்.
நிஷ்காம்ய கர்மம் என்றொரு தொகுப்பு, நமக்கிட்ட பணியை விருப்பு வெறுப்பின்றி செவ்வேனே செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது. தொழில் வேறு நம்பிக்கை வேறு என்று வாழ்ந்தவர்களைப் பற்றிய சுவையான தொகுப்பு அது. தொகுப்பின் சாரத்தை, கவிஞர் தன்பாணியில் ஒரு கவிதையில் அடைத்திருப்பார்.
பாட்டும் வசனமும்
படத்தில் வரும் சமயத்திற்கேற்றபடி;
சமயத்துக் கேற்றபடி அல்ல!
நினைவு நாடாக்களை முழுவதுமாக படித்து முடிக்கும் போது தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. நினைவும் அது பதிந்த நாடாவும், சிலசமயம் சிலர் வசதிக்கேற்றபடி (ஏனோ மனது இதைச் சொல்லுகிறது???).
ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று தலைமுறையைக் கண்ட கவிஞர் வாலிபக்கவிஞர் என்பதைப் பல தொகுப்பில் பார்க்க முடிந்தது. கண்ணதாசனைப் பற்றிய கவிதை “பகைவனுக் கருள்வாய்” என்ற தொகுப்பில் இருந்தது. தலைப்பு தெளிய கொஞ்சம் காலவகாசம் தேவைப்பட்டது.
மாலை நேர மேடைகளில்
கண்ணதாசனும் அடியேனும்
எலியும் பூனையுமாய்; கோப்பை
ஏந்தும் பொழுதுகளில்
எதுகை மோனையுமாய்!
எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும், வி. கோபாலகிருஷ்ணனும், டி.எம்.ஸூம், எம்.ஸ்.வியும், இளையராசாவும் பல தொகுப்புகளில் எட்டிப் பார்க்கிறார்கள். நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவுகள் என்று தோன்றுகிறது.
காலத்தின் ஆளுமை என்றொரு தொகுப்பு, கொஞ்சம் கவியரங்கத்தைப் பற்றியது. காரைக்குடி கம்பன் கழகத்திற்கு கவிஞரால் பாடப்பட்ட கவிதையும் இருக்கும். அருமையான சிந்தனையைக் கொண்டிருக்கும். வார்த்தைஜாலங்களை புதுக்கவிதையில் இஷ்டத்துக்கிடலாம்; ஆனால் காவியத்தில் இடுவது கொஞ்சம் கடினம் என்றே நினைக்கின்றேன்.
சிறுகுரங்கென அதன்வாலில் தீவைத்தானே-
அதுகொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே!
காலத்தின் ஆளுமையின் சாரம் “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!” என்பதுதான்.
வார்த்தைஜாலங்களுக்கு என்று ஒரு தொகுப்பு உண்டு, பெயர் “இரு தலைப்புகள்”. நாகூர் – நா கூர்; மதுவருந்தியது – மது வருந்தியது; கண் மூடியதால் மண் மூடியவர்கள் அல்ல – மண் மூடியதால் கண் மூடியவர்கள் என வரிக்கு வரி ஜாலங்கள் ஜலங்களாக ஓடுகின்றது. நனைவதில் விருப்பம் உள்ளவர்கள் நன்றாக நனையலாம்.
உடுமலை நாராயணகவியைப் பற்றி ஒரு தொகுப்பு, இதுவரை கேள்விப் பட்டிராத விசயங்களைக் கொண்டுள்ளது. உள்ளதை உள்ளபடி சொல்ல கொஞ்சம் தைரியம் வேண்டும். கவிஞருக்கோ அது தாராளமாக உள்ளது. கொஞ்சம் மனதை நெகிழ வைக்கும் தொகுப்புகளுக்கும் குறைவில்லை இப்புத்தகத்தில். கவிஞரின் கன்னிக் கவிதையை சொன்ன இடமும் சொல்லிய விதமும் ஆஹா!!!
நிலவுக்கு முன்னே
நீவர வேண்டும்;
நீவந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?
குறையொன்றுமில்லை என்ற தொகுப்பின் வழியாக குறையொன்றுமில்லை என்று சொல்லி நிறைவு செய்திருக்கிறார் கவிஞர். படித்து முடித்ததும் குறையொன்றுமில்லை என்றே தோன்றியது.
ஆண்ட கவிக்கு, ஏழையின் பரிசு.ஏதோ என்னால் முடிந்தது….
காவிரிக் கவிஞரின்
பாவிரியும்; காவியத்தில்
வேல்விழிக்கு ஆடவரும்
கைகோர்க்க ஆடவரும்!

Comments
Post a Comment