வாழ்க்கை

வாழ்க்கையென்ற
மலைப் பாதையில்
ரேகைகளாய் பிரிவுகள்
இணைப்புகளை அறிய
முக்காலும் தேய்ந்துவிடும்
முகங்களும் ரேகையிடும்!.
ஒன்று விருப்பப்பாதை
சிலபடி இறங்கினால்
தெரியும் வொருகுளம்
அலையாத நீரில்தெரியுமுன்
முகம் காட்டுமதன்குணம்!
மற்றொன்றோ படிகட்டுகள்
யாரோகட்டி வைத்தவை
ஆசைகள் பூட்டியகைகளுடன்
கண்கள்மூடியும் கால்செல்லும்
அலையலையாய் மனிதர்கள்!
மற்றவற்றில் கால்தடங்களில்லை
பயணிக்க தடையேதுமில்லை…!

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

விரல்கள்