Posts

பேராசை பேரலைகள்

ஆடையும் காலணியும் கொண்டவரைச் சொல்லிடும் ஆளும்-மனதும் ஆழ்மனதும் கொண்டதை சொல்லிடும் ஆலுடன்-வேலுடன் குளித்துவிட மணமது சென்றிடும் ஆசைகளுடன் ஊடுருவ பேரலைகள் சுழன்றிடும்

அலைகள்

படிப்பது உணர்ந்திட வாய்ப்பில்லை என்பது போல எழுதவில்லை என்றால் வாழ்ந்திடும் ரகசியம் போல எழுந்துவரும் பூதங்களை அடக்க முடியாதது போல எழுந்துவரும் புலனினை அடக்க முடியாது போல!.

கவர்தல்

கவர்தல் என்பதை, தெரிந்த நன்றாக புரிந்த ஒன்றை மனதில் பதித்து, தக்க சமயத்தில் தமக்குரிய நடையில் வெளிப்படுத்துதல் என்றும் கூறலாம். தெரிந்தும் தெரியாமலும் என இருவகையாக கவர்தல் நிகழும். மிகவும் பிடித்த பிரபலங்களின்/அன்பர்களின் நடை உடை பாவனைகள் பலரை எளிதில் கவரும். ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில்லதை அனைவரின் முன்பாக அதை வெளிப்படுத்துவார்கள். இது ஒருவகையில் ஜெராக்ஸிங் மாதிரியான நிகழ்வாக இருக்கும். இது முதல்வகை. மற்றொரு வகை ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பிடித்தவர்களின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் சில வழக்கங்கள் தானாக தன்னுடைய கற்பனையுடன் சேர்ந்து நிகழ்வாகவோ அல்லது வார்த்தைகளிலோ வெளிப்படும். இவ்வகையான கவர்தல் பொதுவாக எழுத்துத்துறையில் அதிகமாக காணப்படும். இது இரண்டாவது வகை. அனைவரும் என்றாவது ஒருநாள் கவர்தலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொதுவான தலைவிதி போலும். இத்தளத்தில் உள்ள சில கவிதைகளில் கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளின் தாக்கத்தையும், கவிஞர் வாலி அவர்களின் கவிநடையையும் காண முடியும். இரண்டாவது வகையாக இருக்கக்கூடும். திரு. சுகி. சிவம் அவர்கள், இதைப்பற்...

உட்பொருள்

கைகூப்பி நம்பிக்கை வேண்ட வரிசையிடம் சேரும் கால்களை வகையாய் பிரித்திடும் பொருள் உலகில் உலவும் உட்பொருள்…!

நீயுறங்கும் பொழுதில்…

ஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும் உன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன ஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும் உன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன ஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும் உன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன ஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள் உன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின

தேன்சிட்டுகள்

அமர்ந்துண்டு பார்த்ததில்லை பறந்துண்டு பார்த்ததுண்டு வெளிச்சம் நிறைந்திருக்கும் அலைகள் இருந்திருக்கும் தெருக்களில்  வருவதில்லை மலர்களை தேடும் தேன்சிட்டுகள்!.

மனதைக் கவர்ந்த பாடல்

காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்களே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன. தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு  முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது? தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் கூட்டணி அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில்...