கவர்தல் என்பதை, தெரிந்த நன்றாக புரிந்த ஒன்றை மனதில் பதித்து, தக்க சமயத்தில் தமக்குரிய நடையில் வெளிப்படுத்துதல் என்றும் கூறலாம். தெரிந்தும் தெரியாமலும் என இருவகையாக கவர்தல் நிகழும். மிகவும் பிடித்த பிரபலங்களின்/அன்பர்களின் நடை உடை பாவனைகள் பலரை எளிதில் கவரும். ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில்லதை அனைவரின் முன்பாக அதை வெளிப்படுத்துவார்கள். இது ஒருவகையில் ஜெராக்ஸிங் மாதிரியான நிகழ்வாக இருக்கும். இது முதல்வகை. மற்றொரு வகை ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பிடித்தவர்களின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் சில வழக்கங்கள் தானாக தன்னுடைய கற்பனையுடன் சேர்ந்து நிகழ்வாகவோ அல்லது வார்த்தைகளிலோ வெளிப்படும். இவ்வகையான கவர்தல் பொதுவாக எழுத்துத்துறையில் அதிகமாக காணப்படும். இது இரண்டாவது வகை. அனைவரும் என்றாவது ஒருநாள் கவர்தலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொதுவான தலைவிதி போலும். இத்தளத்தில் உள்ள சில கவிதைகளில் கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளின் தாக்கத்தையும், கவிஞர் வாலி அவர்களின் கவிநடையையும் காண முடியும். இரண்டாவது வகையாக இருக்கக்கூடும். திரு. சுகி. சிவம் அவர்கள், இதைப்பற்...