நினைவு நாடாக்கள்
ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தொடராத என்னைப் போன்றோருக்கு தற்பொழுது புத்தகமாக வந்துள்ளது. இருக்க வேண்டும் உங்கள் எழுத்து வாராவாரம்; இருக்க கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்! என்று ஆரம்பமே கவிஞரின் கலைநயதில் களைகட்டுகிறது. முதல் தொகுப்பே வாழ்க்கையை பிய்து பின்னி விளையாடுகிறது. ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும் இவ்வகை எழுத்தில் வாழ்வும், வாழும் எழுத்தும். நிஷ்காம்ய கர்மம் என்றொரு தொகுப்பு, நமக்கிட்ட பணியை விருப்பு வெறுப்பின்றி செவ்வேனே செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது. தொழில் வேறு நம்பிக்கை வேறு என்று வாழ்ந்தவர்களைப் பற்றிய சுவையான தொகுப்பு அது. தொகுப்பின் சாரத்தை, கவிஞர் தன்பாணியில் ஒரு கவிதையில் அடைத்திருப்பார். பாட்டும் வசனமும் படத்தில் வரும் சமயத்திற்கேற்றபடி; சமயத்துக் கேற்றபடி அல்ல! நினைவு நாடாக்களை முழுவதுமாக படித்து முடிக்கும் போது தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. நினைவும் அது பதிந்த நாடாவும், சிலசமயம் சிலர் வசதிக்கேற்றபடி (ஏனோ மனது இதைச் சொல்லுகிறது???). ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று தலைமுறையைக் கண்ட கவிஞர் வாலிபக்கவிஞர் என்பதைப் பல தொகுப்பில் பார்க்க முடிந்தது....