Posts

Showing posts from May, 2015

கைவண்ணம்

எல்லையில்லா தீட்டல்கள் படவரை முறையானது வாலில்லா விலங்குகள் வால்தனம் காட்டியது முகத்தின் சுளிப்புகள் முகமுடி கிழித்தது ஏந்திய தூரிகை வண்ணத்தை பொழிந்தது எழுதிய காட்சிகள் கைகாலிலும் இருந்தது கற்பனை குதிரையும் நிறம்வழி வந்தது

ஆட்டம் நீரோட்டம்

கோடைக்கு வியர்வையை உடலுடுக்க குறைகண்ட விழிகளும் சிறகடிக்க உடுப்பும் உடலுடன் பயணிக்க காற்றுடன் வெயிலும் கலந்தடிக்க மெலிந்தவள் விரிந்து நிலமணைக்க மனதும் உடலும் குளிர்ந்த நீரும் கொதிக்கும் மணலும் பாய்ச்சலும் நீச்சலும் சுழன்றுவிட தென்னங் கீற்றைபோல மிதந்துவிட சிறகடித்த விழிகளும் சிவந்துவிட உள்ளும் புறமும்கறை களைந்துவிட ஒட்டத்தில் ஆட்டம் களைத்துவிட மனதும் உடலும் மலரும்தளிரும்