ஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும் உன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன ஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும் உன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன ஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும் உன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன ஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள் உன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின