மனதைக் கவர்ந்த பாடல்
காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்களே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன. தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது? தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் கூட்டணி அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில்...